கோவையில் நடைபெற்ற “பாரதி யார் ? ஓர் புதிய பாதை !” என்ற கலை நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பங்கேற்றார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கோவையில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கலையரங்கத்தில் நடைபெற்ற “பாரதி யார் ? ஓர் புதிய பாதை !” கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
சின்மயா யுவா கேந்திரா குழுவினர் பாரதியாரின் வாழ்க்கை பயணத்தை நாடக வடிவில் அழகுற அரங்கேற்றியது மனதை நெகிழ செய்தது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலேயே சுயசார்பு பாரதம் பற்றி மிக ஆழமாக பேசியவர் பாரதியார்.
கவிஞர், சமூக போராளி, சுதந்திரப் போராட்ட வீரர், பெண்ணுரிமை காவலர் என பன்முகம் கொண்ட மாமனிதராய் வாழ்ந்த மகாகவியின் பெருமைகளை கூற வார்த்தைகள் போதாது. சமீபத்தில் பாரத பிரதமர் மோடிபாரதியாரின் படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டது அவரது பெருமைகளை உலகறிய செய்யும் பணியின் மற்றொரு முன்னெடுப்பாக இருந்தது.
பாரதியின் வாழ்க்கையை கண்முன் நிறுத்திய இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த சுவாமி விமலானந்தா அவர்கள், சுவாமி அனுகூலனந்தா ள், சுவாமி மித்ரானந்தா , திருமதி மேனகா , பிரம்மச்சாரி விக்னேஷ் சைதன்யா ஜி அவர்கள் மற்றும் சின்மயா யுவா கேந்திரா குழுவினருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரதியாரின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல இது போன்ற நிகழ்ச்சிகளை நாம் அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.