மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளதால், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 10ஆம் தேதி யாக சாலை பூஜை தொடங்கியது.
விழாவில் மூலவர், வெள்ளித்தகடுகளால் அலங்கரிக்கப்பட உள்ளார். 10 ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இறுதிகட்டப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.