விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நடத்துனர் ஏறுவதற்கு முன்பே பேருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
சிவகாசிக்கு செல்லக்கூடிய அரசு பேருந்து விருதுநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த இந்த பேருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தபின் நடத்துநர் இல்லாததை பயணிகள் அறிந்தனர்.
பின்னர் இது தொடர்பாக ஓட்டுநரிடம் தெரிவிக்கப்பட்ட நிலையில் பேருந்து நிறுத்தப்பட்டு நடத்துனர் இருசக்கர வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டார். ஓட்டுநரின் கவனக்குறைவான இந்த செயல் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.