நெடுந்தீவு கடலில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 14 சுற்றுலாப் பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தென் இலங்கையைச் சேர்ந்த 12 சுற்றுலாப் பயணிகள் சிறிய படகில நெடுந்தீவுக்குச் சென்றுள்ளனர். குறிகாட்டுவான் பகுதிக்கு திரும்பியபோது திடீரென நடுக்கடலில் படகு பழுதானதால் சுற்றுலா பயணிகள் வெள்ளைக்கொடியை காட்டியுள்ளனர்.
அப்போது, அந்த வழியாக சென்ற படகுகளில் இருந்த ஊழியர்கள் இதனை கவனித்துள்ளனர். உடனடியாக துரிதமாக செயல்பட்ட அவர்கள், படகில் இருந்த 12 சுற்றுலாப் பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். வேறு படகில் 12 பேரும் மாற்றப்பட்ட நிலையில், விபத்திற்குள்ளான படகு கடலில் மூழ்கியது.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த இலங்கை கடற்படையினர், மீட்கப்பட்ட பயணிகளைத் தங்கள் படகில் ஏற்றிக்கொண்டு குறிகாட்டுவான் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.