திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் பெட்டிகளில் 7 மணி நேரமாக தொடர்ந்து எரிந்த தீயை, நுரை வகை தீயணைப்பு கொண்டு வீரர்கள் அணைத்தனர்.
திருவள்ளூர் – ஏகாட்டூர் ரயில் நிலையம் இடையே சரக்கு டேங்கர் ரயில் காலை ஐந்து மணிக்கு தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் 11 பெட்டிகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்த நிலையில், தண்டவாளத்தில் கிடக்கும் எரிந்த பெட்டிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, எரிந்த பெட்டிகளில் இருந்து மீண்டும் தீ எரிய தொடங்கியதால் நுரை வகை தீயணைப்பு கொண்டு வீரர்கள் அணைத்தனர்.
மேலும், தீ விபத்துக்குள்ளான பகுதியில் சேதமான மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.