வார விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஏழாம் தேதி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து 3 மண்டல பூஜை வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வார விடுமுறையான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலில் குவிந்தனர். கடலில் புனித நீராடி, 5 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.