சர்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, இன்று மாலை பூமியை நோக்கி புறப்படுகிறார்.
ஜூன் 25ம் தேதி இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, பெக்கி விட்சன், திபோர் கபு உள்ளிட்ட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். 14 நாட்களாக அவர்கள் அனைவரும் விண்வெளியில் பயிர் வளர்ப்பு உள்ளிட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அவர்களது பயணம் நிறைவடைந்துள்ள நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் 4 வீரர்களும் இன்று பூமியை நோக்கி புறப்படவுள்ளனர்.
இன்று மாலை 4.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு, 4.35 மணிக்கு பூமியை நோக்கி பயணிக்கவுள்ளது. 24 மணிநேர பயணத்திற்கு பிறகு நாளை மதியம் 3 மணியளவில் சுபான்ஷு சுக்லா உள்ளிடோர் பூமியை வந்தடையவுள்ளனர். கலிபோர்னியாவின் கடற்கரை பகுதியில் ட்ராகன் விண்கலத்தை தரையிறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.