திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இதுவரை முடிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று திமுக ஆட்சி யில் அவலங்களை எடுத்துக் கூறி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து பூத்களிலும் வலிமை ஆக்குவதற்கு மாவட்டத்தில் இருந்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றும் அது குறித்து ஆய்வு செய்ததாக தெரிவித்தார்.
மேலும் 2026 தேர்தலில் தங்களது கூட்டணி ஆட்சி அமைவதற்கு ஏதுவாக திமுகவினர் மக்கள் வெறுக்கும் அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். மேலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதற்காக இந்த பயணத்தைத் தொடங்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய பாஜக மாநில தலைவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக கூட்டணி டெபாசிட் வாங்காது என கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் உதயநிதி ஸ்டாலின் என்ன ஜோசியரா என கேள்வி எழுப்பினார்
மேலும் திமுகவினர் தான் அடிமை மாடலும், பாசிச அரசியலும் செய்கிறார்கள் எனவும் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த அ.ராசா பெண்களை கேவலமாக பேசுவதாகவும் தெரிவித்தார்.