இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன்கள் குவித்தன. இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்தது.
193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும், கருண் நாயர் 14 ரன்களிலும், கேப்டன் சுப்மன் கில் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால், 4ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி வெற்றிப்பெற இன்றைய ஆட்டத்தில் 135 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மறுபுறம், இங்கிலாந்து அணி வெற்றிபெற 6 விக்கெட்களை வீழ்த்த வேண்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.