நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள தலைமை தேர்தல் ஆணையம், அதற்கான பணிகளை துரிதப்படுத்தி உள்ளது.
பீஹார் மாநிலத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு, வாக்காளராகப் பதிவு செய்து கொண்டவர்கள், இந்தியக் குடிமகன் என்பதை நிரூபிக்க பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்காக வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று ஆவணங்களை சரிபார்த்து சிறப்பு தீவிர திருத்த படிவத்தை பூர்த்தி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பீகாரில் சிறப்பு தீவிர திருத்தப் பணி 80 சதவீதம் முடிவடைந்து விட்டதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் அடுத்த மாதம் முதல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுசார்ந்த பணிகளை மாநிலங்களில் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.