இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரால் காசா பகுதியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்தது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவமும், ஹமாஸ் அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகின்றன. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், குடியிருப்புகள் என அனைத்து பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாளுக்கு நாள் இந்த போரின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. காசாவில் குடிநீர் பிடிக்கும் பகுதியில் தற்போது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 6 சிறுவர்கள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம், போர் காரணமாக காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்துள்ளது.