விருதுநகரில் ஆய்வு அச்சம் காரணமாக 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. தொடர் விபத்துகளால், பட்டாசு ஆலைகளில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இதற்காக 15 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக் குழுவினர் ஆய்வை தொடங்கியுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக உரிமம் ரத்து செய்யப்படும் என்ற அச்சத்தால் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.