இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் வேட்டுவம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டம் பகுதியை சேர்ந்த சண்டை பயிற்சியாளரும் ஸ்டண்ட் யூனியன் முக்கிய நிர்வாகியுமான மோகன்ராஜ் படப்பிடிப்பு சமயத்தில் காரில் இருந்து ஜம்ப் செய்த போது தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.