ரோமானியாவில் நடிகர் அஜித் குமார் பைக் ரைடு மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்,திரையுலகத்துடன் மட்டுமல்லாமல், கார் மற்றும் பைக் ரேஸ் போன்ற துறைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
சமீபத்தில் ரோமானியாவில் நடைபெற்ற பைக் ரேசில் பங்கேற்று அஜித்குமார் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், அஜித் தனது பைக் ஓட்டும் திறமையை வெளிப்படுத்தியுள்ளானர். அதிரடியான ஸ்பீடு மற்றும் திறமையுடன் பைக்கில் சவால்களை ஏற்றுக்கொண்டு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.