ராஷ்மிகா நடிக்கும் “TheGirlfriend” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, குபேரா படத்திற்கு பிறகு தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்துடன் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் ஜூலை 16 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதைப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.