திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கல் அரவை ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சுடுகாட்டில் உணவு சமைத்துச் சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மல்லபள்ளி பகுதியில் கல் அரவை ஆலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குடியிருப்பு பகுதியில் இத்தகைய ஆலைகளை அமைக்கக் கூடாது என விதியுள்ள நிலையில், அதனை மீறி ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.