நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது.
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது.
கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவசை திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபாடு நடத்தினர்.