உலகின் 3 முன்னணி நிறுவனங்களின் மின்சார கார்கள் இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில், மின்சார கார் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்த நிலையில், டெஸ்லா, வின்ஃபாஸ்ட், கியா நிறுவன மின்சார கார்களின் விலை உள்ளிட்ட விவரங்களை நாளை வெளியாகின்றன. டெஸ்லா தனது மின்சார கார் ஒய் சீரிஸை அறிமுகம் செய்கிறது. இதன் விலை 55 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழுக்க முழுக்க தமிழகத்தில் உற்பத்தியாகும் வின்ஃபாஸ்ட் மின்சார காரின் முதல் 2 மாடல்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.
மேலும், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே கியா நிறுவனத்தின் கேரன்ஸ் க்ளாவிஸ் மின்சார கார் அறிமுகமாகிறது. கியா நிறுவன கேரன்ஸ் க்ளாவிஸ் மின்சார கார் விலை 19 லட்சம் முதல் 20 லட்ச ரூபாய்க்குள் நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.