சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் இருந்து செல்போன் திருடிவிட்டுத் தப்பியோட முயன்ற இளைஞரை போலீசார் துரத்தி பிடித்து கைது செய்தனர்.
வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகன் ஜோஸ்வா, சென்னை ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகக் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவந்த நிலையில், ஜோஸ்வாவை போலீசார் பின் தொடர்ந்தனர். இந்த நிலையில், பயணியின் செல்போனை திருடிய இளைஞர் அங்கிருந்து தப்பியோடினார்.
அப்போது அவரை துரத்திப்பிடித்த போலீசார், அவரிடமிருந்த 5 செல்போன்கள் மற்றும் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பணத்தைப் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே இளைஞரை போலீசார் துரத்திப் பிடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.