அசாமில் மனைவிடம் விவாகரத்து கிடைத்துவிட்டதாகக் கூறி தனக்கு தானே பாலாபிஷேகம் செய்து இளைஞர் ஒருவர் கொண்டாடி உள்ளார்.
நல்பாரி மாவட்டம் போரோலியபாராவை சேர்ந்த மணிக் அலி என்பவரின் மனைவி திருமணத்திற்கு மீறிய உறவிலிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் வீட்டில் இருந்து 2 முறை மனைவி வெளியேறியதனாலும் தனது குழந்தைக்காகச் சமரசம் செய்து, அவரை மணிக் அலி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து கிடைத்தால் உற்சாகமடைந்த மணிக் அலி, 40 லிட்டர் பால் வாங்கி, தனக்குத்தானே பாலாபிஷேகம் செய்து மகிழ்ந்தார்.
தனக்கு இன்று முதல் எனக்கு விடுதலை எனக் கூறிக்கொண்டே அவர் பாலாபிஷேகம் செய்த காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.