பிரான்ஸ் நாட்டுத் தேசிய தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் இரு நாடுகளின் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் புதுச்சேரியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கடற்கரைச் சாலையில் உள்ள போர் வீரர்களின் சிலைக்கு பிரான்ஸ் நாட்டினரும், புதுச்சேரி மக்களும் இணைந்து மரியாதை செலுத்தினர்.
மேளதாளத்துடன் இருநாட்டுக் கொடிகளையும் பிடித்தபடி அவர்கள் வந்தனர். அதைத் தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் சென்னை பிரெஞ்சு துணைத் தூதர் எத்தேன் ரோனாலட் பிஃகு, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் போர் வீரர்களின் சிலைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.