மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜியின் 12 கோட்டைகளை யுனெஸ்கோ உலக பாரம்பரியமாக அறிவித்ததை மகாயுதி கூட்டணி தலைவர்கள் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டாடினர்.
இந்தியாவில் உள்ள சத்ரபதி சிவாஜியின் 12 கோட்டைகள் அண்மையில் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
இதனை மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி தலைவர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலைக்கு மாலை அணிவித்து மகிழ்ந்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டு தொண்டர்களுடன் கொண்டாடினர்.