திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கை விசாரித்துவரும் சிபிஐ அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை பக்தர்கள் விடுதியில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்கள் தாக்கி இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக 6 தனிப்படை காவலர்கள் கைதான நிலையில், வழக்கை சி.பி.ஐ விசாரிக்கத் தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க ஏதுவாக, மடப்புரம் கோவிலின் எதிரேயுள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில், 3 ஏசி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.