தஞ்சை திமுக மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் மாற்றப்பட்டதன் பின்னணி காரணங்கள் வெளியாகி உள்ளது.
திமுகவில் உள்ள ஒன்றிய நகரப் பொறுப்பாளர்களை மதிப்பதில்லை எனவும், கும்பகோணம் திமுக மிகவும் மோசமான நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் மாவட்டச் செயலாளரின் செயல்பாடுகள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் கட்சி பணத்தை எடுத்து தனது சொந்த செலவிற்குப் பயன்படுத்துவதாகக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கும்பகோணம் ஒன்றிய நகர மற்றும் செயலாளர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
கல்யாணசுந்தரத்தின் மகன் முத்து செல்வம் நடத்தி வரும் குடிநீர் ஆலையில் போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்தப்பட்டது ஆய்வில் தெரியவந்தது சர்ச்சையைக் கிளப்பியது.
மேலும் அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்ற நிகழ்ச்சியில் 10 மாதம் சுமந்து பெற்றால் தான் பிள்ளை, இடையில் பிறந்தால் அது வேறு வழியில் பிறந்த குழந்தை எனக் கல்யாணசுந்தரம் கூறியது பேசு பொருளானது.
திமுகவினர் உழைப்பால் வெற்றி பெற்ற மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா திமுகவினரை மதிப்பதில்லை எனக் கூட்டத்தில் வெளிப்படையாகப் பேசியது சர்ச்சையானது. இதுபோன்று தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து கல்யாணசுந்தரம் நீக்கப்பட்டுள்ளார்.