சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் பகுதி நேர ஆசிரியர்களை வரம்பு மீறித் தொட்டு கைது செய்ததைத் தட்டி கேட்ட செய்தியாளரை போலீசார் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 7 நாட்களாகச் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தைப் பகுதி நேர ஆசிரியர்கள் முற்றுகையிட முயன்றனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் சாலையில் தர தரவென இழுத்துச் சென்று கைது செய்தனர்.
மேலும் பெண் பகுதி நேர ஆசிரியர்களை வரம்பு மீறித் தொட்டு கைது செய்ததால் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால் ஆத்திரமடைந்த போலீசார் செய்தியாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். போலீசாரின் இந்த செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.