காவல்துறை உயர் அதிகாரிகள் 33 பேரைப் பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் காவல்துறையினர் செயல்பாடுகள் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் 33 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருபுவனம் லாக்கப் மரண வழக்கில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு பதிலாக சிவபிரசாத் சிவகங்கை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமலா பால் மேலாளர் தற்கொலை வழக்கில் சர்ச்சையில் சிக்கிய கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜன், பழனியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பட்டாலியன் எஸ்பியாக மாற்றப்பட்டார்.
வேலூர் சரக டிஐஜி-யாக இருந்த தேவராணி காஞ்சிபுரம் சரக டிஐஜி-யாக மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரியலூர் எஸ்.பியாக விஸ்வேஷ் பாலசுப்பிரமணியமும், தேனி எஸ்.பி-யாக ஸ்னேக பிரியா நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி-யாக அருளரசை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் காவல்துறை தலைமையக ஐஜி-யாக மகேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் எஸ்.பி-யாக ஷியாமளா தேவியும், கரூர் எஸ்.பி-யாக ஜோஷ் தங்கையா நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வேலூர் எஸ்.பியாக மயில் வாகணனும், நாமக்கல் மாவட்ட எஸ்.பியாக விமலாவையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.