சீன அமைச்சர் லியு ஜியான்சாவோவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீனா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் அமைச்சர் லியு ஜியான்சாவோவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா – சீனா உறவு குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதித்தாக கூறியுள்ளார்.
மேலும், மாறிவரும் உலகளாவிய ஒழுங்கு மற்றும் பன்முகத்தன்மையின் தோற்றம் குறித்து விவாதித்ததாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.