திருப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரில் உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்றுவரும் நிலையில், போதிய வகுப்பறைகள் இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் மாணவர்கள் பள்ளியின் மொட்டை மாடியிலும், நடைப்பாதையில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்த அறிந்த பாஜகவினர் நியாயம் கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் அறிவித்தனர்.
இந்நிலையில், போதிய வகுப்பறை வசதி செய்யப்படாததைக் கண்டித்து பள்ளி முன்பு பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பாஜகவினரை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.