MLC டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை 2ஆவது முறையாக கைப்பற்றி MI நியூயார்க் அணி அசத்தி உள்ளது. MLC டி20 தொடரின் இறுதிப்போட்டியில் MI நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ப்ரீடம் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய MI நியூயார்க் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வாஷிங்டன் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
கடைசி ஒவரில் வாஷிங்டன் அணி வெற்றி பெற 12 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், MI நியூயார்க் பவுலர் ருஷி உகர்கர், அந்த ஓவரில் 1 விக்கெட் எடுத்து 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார்.