அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித்குமார், கடந்த ஜூன் 28ஆம் தேதி நகை திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார்.
அஜித்குமாரின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அஜித்குமாரின் தாய், சகோதரர் உள்ளிட்டோருடன் மானாமதுரை டிஎஸ்பியாக இருந்த சண்முகசுந்தரம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மண்டபத்தை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதை அப்பகுதி மக்கள் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளனர்.
மேலும், ஆத்திரமடைந்த சில நபர்கள், மண்டபத்தின் கதவை உடைத்து வெளியே வருமாறு கூச்சலிட்டனர்.
அஜித்குமார் குடும்பத்தினருடன் சண்முகசுந்தரம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.