மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தாக்கப்பட்ட கோசாலை உள்ளிட்ட பகுதியில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு குறித்து விசாரித்த தனி நீதிபதி, தனது அறிக்கையைக் கடந்த 8 ஆம் தேதி தாக்கல் செய்தார். இதையடுத்து சிபிஜ விசாரணையைத் தொடங்கி ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் சிபிஐ டிஎஸ்பி மோஹித்குமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் தங்களது விசாரணையை தொடங்கினர்.
அதன்படி அஜித்குமார் தாக்கப்பட்ட கோசாலை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர்.