பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்திய திரைத்துறை மற்றும் கலாச்சாரத்தின் மாபெரும் அடையாளமாக நடிகை சரோஜா தேவி திகழ்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.
சரோஜா தேவியின் திறமையான நடிப்பு தலைமுறை தாண்டியும் அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, பல மொழிகளில் படைப்புகளை வழங்கிய சரோஜா தேவியின் நடிப்பு பன்முகத்தன்மையை எடுத்துக் காட்டியுள்ளதாகப் புகழாரம் சூட்டியுள்ளார்