திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கனரக லாரியை திருடி சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கருணைபாளையம் பகுதியில் பெரியசாமி என்பவர் தனது கனரக சரக்கு லாரியை நிறுத்திவிட்டு வீட்டிற்குச் சென்றார்.
மறுநாள் வந்து பார்த்தபோது லாரி இல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 3 பேரைக் கைது செய்தனர்.