திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் ஆனி மாத உண்டியல் காணிக்கையாக 4 கோடியே 3 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் கிடைத்ததாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அண்ணாமலையார் கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தில் ஆனி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில், கோயில் ஊழியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கையாக 116 கிராம் தங்கம், 2 கிலோ 438 கிராம் வெள்ளி கிடைத்ததாகக் கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.