சேலம் மாவட்டம் ஓமலூர் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை மீது மர்மநபர்கள் கருப்பு மை ஊற்றிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓமலூர் சாலையில் உள்ள அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலை மீது அதிகாலை 4 மணியளவில் மர்ம நபர்கள் கருப்பு மை ஊற்றியுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.