ஹாரி பாட்டர் இணையத் தொடரின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜே.கே.ரவுலிங் எழுதிய ‘ஹாரி பாட்டர்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் 8 பாகமாகப் படத்தைத் தயாரித்து வெளியிட்டது.
பெரும் வரவேற்பை பெற்ற ‘ஹாரி பாட்டர்’ திரைப்படம் தற்போது வெப் சீரிஸாக உருவாகிறது. ஹெச்பிஓ தளம் தயாரிக்கும் இந்த சீரிஸிற்கான படப்பிடிப்பு தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனுடன், ஹாரி பாட்டராக நடிக்கும் டொமினிக் மெக்லக்லினின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகி உள்ளது.
இந்த வெப் சீரிஸில் முன்னணி கதாபாத்திரங்களான ஹாரி பாட்டராக டொமினிக் மெக்லக்லின், ஹெர்மாயின் கிரேஞ்சராக அரபெல்லா ஸ்டாண்டன் மற்றும் ரான் வீஸ்லியாக அலஸ்டர் ஸ்டவுட் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தத் தொடரை 2027-ஆம் ஆண்டில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.