எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனத்தின் முதல் விற்பனையகத்தை மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் இன்று திறந்து வைத்தார்.
இந்தியாவின் வணிகத் தலைநகராக விளங்கும் மும்பையில், டெஸ்லா நிறுவனம் தனது முதல் ஷோரூமை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது.
பாந்த்ராவில் உள்ள குர்லா வளாகத்தில் நடைபெற்ற விற்பனை திறப்பு விழாவில், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவீஸ் கலந்து கொண்டு, நிறுவன வளர்ச்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
மின்சார வாகன உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Y ரக கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த Y ரக கார்களில் RWD, AWD என 2 வகையான மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ள டெஸ்லா குழுவினர், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸிற்கு அந்த கார்களின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கமளித்தனர்.