நாட்டின் 2ஆவது மிக நீளமான கேபிள் பாலத்தைக் கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
சிக்கந்தூரில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லம் மக்கள், அம்பரகோட்லு சென்று பின்னர் அங்கிருந்து ஷராவதி ஆற்றில் படகு மூலம் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.
இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு, அம்பரகோட்லு – கலசவள்ளி இடையே 473 கோடி ரூபாய் மதிப்பில் மிக நீளமான புதிய பாலத்தை அமைத்தது.
2 புள்ளி 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட இந்த கேபிள் பாலத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
இதனால் சிரமமின்றி பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.