கும்பகோணம் அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் வருகை குறைந்து காணப்பட்டதால், கவுண்டர்களில் அமர்ந்திருந்த அதிகாரிகள் செல்போனை பார்த்தபடி பொழுதை கழித்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்டச் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டன.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள மானம்பாடி பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.
முகாமில் மகளிர் உரிமை தொகையை விண்ணப்பிக்க 4 கவுண்டர்களும், மற்ற சேவைகளுக்கு தலா இரு கவுண்டர்களும் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், சிறப்பு முகாம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் மக்கள் வெகு குறைந்த அளவிலேயே கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர்.
இதனால் பெரும்பாலான கவுண்டர்கள் காலியாக காணப்பட்டதால் அங்கு அமர்ந்திருந்த அதிகாரிகள் தங்கள் கைப்பேசிகளைப் பார்த்தபடி ஜாலியாக பொழுதைக் கழித்தனர்.