உலகக் கோப்பை மகளிர் செஸ் தொடரில் தமிழக வீராங்கனை வைஷாலி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
ஃபிடே உலகக் கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி 3-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.