ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என அன்புமணி கூறியிருப்பது அவருடைய கருத்து என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவின் 37-வது ஆண்டு தொடக்க விழாவினையொட்டி, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள காரல் மார்க்ஸ், ஈவெரா, அம்பேத்கரின் சிலைகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் பேட்டியளித்த அவர், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என அன்புமணி கூறியிருப்பது அவருடைய கருத்து எனத் தெரிவித்தார்.