செல்வப் பெருந்தகையால் ஒரு முடிவையாவது சுயமாக எடுக்க முடியுமா? என மூத்த அரசியல் வாதியும், எழுத்தாளருமான தமிழருவி மணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காமராஜரின் 123வது பிறந்தநாளையொட்டி சென்னை புரசைவாக்கத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியவர்,
செல்வப் பெருந்தகையால் ஒரு முடிவையாவது சுயமாக எடுக்க முடியுமா? என்று தமிழருவி மணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
செல்வப் பெருந்தகையால் ஒரு பஞ்சாயத்து தலைவரையாவது சுயமாக சுட்டிக்காட்ட முடியுமா? கேள்வி எழுப்பியவர், செல்வப் பெருந்தகை எல்லாவற்றிற்கும் டெல்லி செல்ல வேண்டும் என்றும் இந்த நேரத்தில் தான் காமராஜர் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
எந்த பின் புலமும் இல்லாமல் நின்றவர் காமராஜர் என்றும் தடைகளை உடைத்து விட்டு இரண்டு பிரதமரை உருவாக்கும் நிலைக்கு வந்தவர் காமராஜர் என்று தமிழருவி மணியன் குறிப்பிட்டார்.