பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் முன்னறிவிப்பின்றி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருச்சி மாவட்டம், பஞ்சப்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை மே 9ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஆனால், கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் திறப்பு விழா நடைபெற்றதால், உடனடியாக பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில், ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்து பேருந்து சேவையை அமைச்சர் கே.என்.நேரு தற்போது மீண்டும் தொடங்கி வைத்துள்ளார்.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென பேருந்து சேவை தொடங்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.