தவெகவின் 2-வது மாநில மாநாடு, ஆகஸ்ட் 25-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு தவெகவின் முதல் மாநில மாநாடு நடைபெற்ற நிலையில், 2-வது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி என்னும் இடத்தில் சிறப்புப் பூஜைகளுடன் மாநாட்டிற்கான பந்தக்கால் நடப்பட்டது.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ஏராளமான தவெகவினர் கலந்து கொண்டனர்.