கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், 2 ஆயிரம் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த ஜூனோ என்பவர் கடந்த 9ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
கட்டுமாவடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வல்லம்பட்டினத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் அத்துமீறி ஜூனோவின் விசைப்படகைக் கட்டி இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான புகார் மீது மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி,கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.