கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம் : வழக்கின் பின்னணி என்ன?
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம் : வழக்கின் பின்னணி என்ன?

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை கடைசி நேரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது தண்டனை குறைக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், இதற்கான காரணம் குறித்தும், வழக்கின் பின்னணி குறித்தும் தற்போது பார்க்கலாம்..

2017ம் ஆண்டு ஏமனில் மயக்க ஊசி செலுத்தி தனது தொழில் கூட்டாளியைக் கொலை செய்தார் என்பதுதான் கேரள செவிலியர் நிமிஷா பிரியா மீதான குற்றச்சாட்டு. இது தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக மரண தண்டனையைக்  கடைசி நேரத்தில் நிறுத்திவைத்துள்ளது ஏமன் அரசு….

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செவிலியர் நிமிஷா பிரியா.  அவர் ஏமன் தலைநகர் சனாவில் தலால் அப்து மஹ்தி என்பவருடன் இணைந்து கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார். ஆனால், மஹ்தியோ, கிளினிக்கின் உரிமம்,  நிமிஷா பிரியாவின் வருவாய், நகைகள், பாஸ்போர்ட் பேன்றவற்றை அபகரித்து கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் இருந்து தப்பிக்கவும், பாஸ்போர்ட்டை மீட்கவும்  நினைத்த நிமிஷா, 2017ம் ஆண்டு மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்திருக்கிறார். துரதிருஷ்டவசமாகக் கூடுதலாக மயக்க மருந்து செலுத்தியதில் மஹ்தி உயிரிழக்க நேரிட்டது. இந்த வழக்கில்  நிமிஷாவை ஏமன் நீதிமன்றம் குற்றவாளி என 2020ம் ஆண்டு அறிவித்தது. 2023ம் ஆண்டு அவரது மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில்,  2025 ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

ஏமனில் ஷரியா சட்டம் அமலில் உள்ள நிலையில், மஹ்தியின் குடும்பத்தினரைக் குருதிப் பணம் எனப்படும் தொகையைப் பெற்றுக்கொண்டு நிமிஷா பிரியாவை மன்னிக்கச் செய்வதுதான், அவரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற ஒரே வழி.

இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த நிமிஷாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அவரது குடும்பத்தினர் போராடினர். முதற்கட்டமாக மரண தண்​டனையை தடுத்து நிறுத்​தக் கோரி, உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்த அவர்கள், நிமிஷாவின் உயிரைக் காப்​பாற்​ற 8 கோடியே 60 லட்சம் ரூபாய் குருதிப் பணம் கொடுக்க முன்வந்துள்ளனர். இந்​தப் பணத்தை மஹ்தி குடும்​பத்​தார் ஏற்​றுக்கொள்ளும் பட்சத்தில், நிமிஷாவின் தண்​டனை ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது நிமிஷாவின் மரண தண்டனை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குருதிப் பணத்தை மஹ்தியின் குடும்பத்தினர் பெற்றுக்கொள்வார்களா? அவர்கள் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள்? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: Kerala nurse's death sentence stayed: What is the background to the case?கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம்
Share
Tweet
SendShare
Previous Post

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

Next Post

செந்தில் பாலாஜி தரப்பு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies