திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு பெருமாளுக்கு மங்கலப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்பரிடம் கணக்கு வழக்குகளைத் திருமலை தேவஸ்தானம் சமர்ப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அதிகாலை கோயில் திறந்தவுடன் ஏழுமலையானுக்கு நித்திய சேவைகள் நடத்தப்பட்டன. பின்னர், ஏழுமலையான் முன்னிலையில் கடந்தாண்டுக்கான வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தேவஸ்தானத்தில் உள்ள அனைத்து துறைகளின் தலைமை அதிகாரிகளுக்கும் புது வரவு-செலவு புத்தகம் மஞ்சள் குங்குமம் வைத்து வழங்கப்பட்டது.
மேலும், ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பட்டாடைகள், மங்களப் பொருட்களுக்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், மங்களப் பொருட்களை ஜீயர்கள் சுமந்து சென்று ஏழுமலையானுக்குச் சமர்ப்பித்தனர்.