சீனாவில் உரிமையாளர் ஒருவர், காரை மீன் தொட்டி போல் மாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வடக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அதன் முன்பக்கம் மீன் தொட்டி போல் அமைக்கப்பட்டு, நண்டுகள், மீன்கள் உள்ளிட்டவை விடப்பட்டிருந்தன. இந்த வீடியோ வைரலான நிலையில், இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.