ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் அளித்துள்ளோம் என்று பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜான் ஹீலி தெரிவித்துள்ளார்.
தலிபான் அரசால் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் மேற்கத்திய நாடுகளுக்கும், அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
அண்மையில் பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்ட நிலையில் அவர்கள் எல்லையில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஆப்கானியா்களுக்கு தாங்கள் அடைக்கலம் அளித்து வருவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.