கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் AI மென்பொருள் பொறியாளர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளதாகத் தலைமை தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
உலகளாவிய முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் குழுமம் 1869ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் நியூயார்க் நகரைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
2023ஆம் ஆண்டு முதல் வருவாயில் உலகின் இரண்டாவது பெரிய முதலீட்டு வங்கியாக இருந்து வரும் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தில் AI மென்பொருள் பொறியாளர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளதாகத் தலைமை தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
லண்டனைத் தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட AI மென்பொருள் பொறியாளர்கள் பணியமர்த்தப்படவுள்ளதாகவும், இதனால், வங்கியின் உற்பத்தித் திறன் மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், AI மென்பொருள் பொறியாளர்கள் ஒருபோதும் ஓய்வு எடுக்கமாட்டார்கள், சம்பள உயர்வு கேட்கமாட்டார்கள் எனவும் தலைமை தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, AI மென்பொருள் பொறியாளர்கள் பணியமர்த்தப்பட்டால் அடுத்த 5 ஆண்டுகளில் உலகளவில் உள்ள வங்கிகளில் பணியாற்றும் 2 லட்சம் ஊழியர்கள் பணியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.